×

பவானி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

பவானி, ஜூன் 25: ஈரோடு மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் பவானி கிளை சார்பில் நேற்று மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, தலைவர் சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் மணியன், நகராட்சி முன்னாள் மேலாளர் தங்கராஜ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bhavani Municipality ,Bhavani ,Erode District Local Government Employees Association ,
× RELATED மாயமான சிறுமி மீட்பு