சென்னை: கவர்னர் என்பது மேனேஜர் மாதிரி தான் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பற்றி அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: கவர்னர் என்பது மேனேஜர் மாதிரி தான். கவர்னர் தேவை இல்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு. நியமிக்கப்பட்ட கவர்னர் பல்கலைக்கழகங்களுக்கு சென்று மக்களுக்கு என்ன தேவை, அரசுக்கு என்ன தேவை? மாணவர்களுக்கு என்ன தேவை? என்று எல்லாம் கவர்னருக்கு புரியணும்.
யாரை வேண்டும் என்றாலும் கவர்னராக நியமிக்கலாம். மோடியின் உறவினர்கள் அல்லது அமித்ஷா உறவினர்களையும் கவர்னராக நியமிக்கலாம். அவர்கள் நியமிப்பவர்களுக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் திறமை உள்ளதா? இல்லையா? என்பது நமக்கு தெரியும். மாநிலத்தை நிர்வகிக்கும் அரசுக்கு தான் தேவை இருக்கும் அவர்கள் தான் கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
