கிருஷ்ணகிரி: திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தத்தை நள்ளிரவில் கைது செய்ய போலீசார் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே போடம்பட்டியில் உள்ள அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்பானந்தம் வீட்டில் இல்லை என குடும்பத்தினர் கூறிய பிறகும் வீட்டில் புகுந்து போலீசார் நள்ளிரவில் சோதனை நடத்தினர்.
