- விருது
- நெருங்கினார்
- காமராஜ்
- தொண்டாமுத்தூர்
- முன்னாள்
- நீதிபதி
- வல்லினாயகம் ஜாம்பவன் விருது
- சென்னை
- பிட்டி
- முன்னாள் உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- வள்ளிநாயகம்
- தியாகரசர் ஸ்டேடியம்
தொண்டாமுத்தூர், ஜூன் 24: சமூகத்திற்கு ஆற்றிய பல்வேறு சிறந்த பணிகளை பாராட்டி நேர்டு இயக்குனர் காமராஜுக்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஜாம்பவான் விருது வழங்கி கெளரவித்தார். சென்னை சர்.பிட்டி. தியாகராசர் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் நேர்டு தொண்டு நிறுவன இயக்குநர் டாக்டர் காமராஜ் பங்கேற்றனர். இதில் உழவர் உற்பத்தி நிறுவனத்தை துவங்கியதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியருமான முனைவர் காமராஜுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர், திருப்பூர் மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத மலைவாழ் கிராமங்களில் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களான நீர்மின் சக்தி மற்றும் சூரிய சக்திகளின் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான கெடுதல் விளைவிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்ததற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பழங்குடியினரின் வாழ்வாதாரம் சிறக்க செய்ததற்கும் கோவை மாவட்டத்தில் 5,000 க்கு மேற்பட்ட மகளிர் மற்றும் இளைஞர்கள் சுய உதவிக்குழுக்களை அமைத்து தொழிற் பயிற்சி கொடுத்து கடன் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து மலைத்தேன், மலைப்புளி, இயற்கை சோப்பு, ஏபிசி மால்டு, சிறுதானிய பொருட்கள், மசாலா பொருட்கள் பாரம்பரிய அரிசி வகைகள், சுகாதார நாப்கின் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு வடவள்ளி வேம்பு அவென்யூவில் விற்பனை அங்காடியை ஏற்பாடு செய்து மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து குழு உறுப்பினர்களும் பொது மக்களும் பயன்பெறும் வகையில் முனைவர் காமராஜ் பணியாற்றியுள்ளார்.
இந்த பணிகளை பாராட்டியும் படித்த வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்களுக்கு வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைத்து கொடுப்பதில் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் கெளரவிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, பொது மக்களுக்கு அடுத்த 25 ஆண்டுக்கு சூரிய மின்சார உற்பத்தி செய்து மின்சார செலவே இல்லாமல் செய்து கொடுத்தற்காகவும் நேர்டு தொண்டு நிறுவன இயக்குநர் டாக்டர் காமராஜுக்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஜாம்பவான் விருது வழங்கி கெளரவித்தார்.
