- இறைவன் மஞ்சனா
- பௌண்டி, பெரூர் கோயில்
- தொண்டாமுத்தூர்
- புண்டி வில்லியங்கிரி இறைவன் கோயில்
- அனி உத்திரா திருமஞ்சனம்
- சிவா
- ஆனி
- ராஸ்ட்ராடாரா
- புண்டி வில்லியங்கிரி ஆனத்வர் கோயில்
தொண்டாமுத்தூர், ஜூன் 23: பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், ஆனி உத்திர திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடந்தது. சிவ தலங்களில், ஆண்டுதோறும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று, திருமஞ்சனம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடக்கும். பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், திருமஞ்சனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை, நடை திறக்கப்பட்டு, பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கனக சபை மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்பாளுடன் எழுந்தருளினார். நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 21 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பின், மகா தீபாராதனை நடந்தது. திருமஞ்சன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கோவை குனியமுத்தூர் அபிராமி நகர் வெள்ளியங்கிரி ஆண்டவர் அறக்கட்டளை தலைவரும், ஓய்வு பெற்ற செயல் அலுவலருமான ராமதாஸ் சுவாமிகளுக்கு பூஜை சீர் வரிசை பொருட்கள் மற்றும் ஏழு வகையான உணவுகளை பக்தர்களுக்கு பரிமாறினார். விழாவில் அறங்காவலர் வினோத் குமார், மத்வராயபுரம் ராஜா, பட்டக்காரர் ராதாகிருஷ்ணன், குனிசை கோவிந்தன், பாலமுரளி, குரு, வெள்ளியங்கிரி, மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
