×

மனுநீதி நாள் முகாமில் அளிக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கலெக்டர் சுமித் குமார் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

முகாமில் 238 பேர் தங்களின் குறைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர்.இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நில ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதியோர் உதவித்தொகை, சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டுமென்றும் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் தங்கள் குறைகளை பொதுமக்கள் மனுவாக எழுதி வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுதாரர்களுக்கு ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Tags : Justice Day ,Chittoor ,Chittoor Collector's Office ,Manujiti ,Day Camp ,Collector ,Sumit Kumar ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு...