×

நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்

 

கிருஷ்ணகிரி, ஜூன் 22: தமிழக முதல்வரின் பிறந்த நாளை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி தவெக கிழக்கு மாவட்ட இணை செயலாளர் முகுந்தன் எம்எல்ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் இன்று (22ம் தேதி) தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தவெக சார்பில், மாவட்ட செயலாளர், நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் என, அனைத்து நிலை பொறுப்பாளர்களும், முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கொடி ஏற்றி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாளை, அனைத்து பொதுமக்களும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு, உற்சாகமாகவும், சிறப்பாகவும், பொதுமக்கள் யாருக்கும் இடைஞ்சல் இன்றியும் கொண்டாட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முகுந்தன் எம்எல்ஏ
தெரிவித்துள்ளார்.

Tags : Krishnagiri ,Thaweka East District ,Joint Secretary Mukundan ,MLA ,Tamil Nadu ,Chief Minister ,Tamil Nadu… ,
× RELATED கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி