புதுடெல்லி: பஞ்சாபில் தற்போதுள்ள பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் சுக்பிந்தர் சிங் ரத்தாவா, விஜய் இந்தர் சிங்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்களுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, “பஞ்சாப் ஒரு முக்கியமான மாநிலம். இங்கு காங்கிரஸ் வெற்றி பெற மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது. எனவே, பேரவை தேர்தலை காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்” என ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
