×

தினந்தோறும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசல்: அவதிக்குள்ளாகும் வாகனஓட்டிகள்

 

போடி: போடியில் 33 வார்டுகளை கொண்ட நகராட்சி நிர்வாகத்தில் முக்கிய சாலையாக விளங்குவது காமராஜர் சாலை, பெரியாண்டவர் ஹைரோடு, போடி தேவாரம் சாலை உள்ளிட்டவைகள் அடங்கிய இந்தப் பகுதியில் அடங்கும். இங்கு போடியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருபவர்களும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து போடி மெட்டு, குரங்கணி மற்றும் கேரளா இடுக்கி மாவட்டம், மலை பகுதி கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் போடி நகருக்கு பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை இரு புறங்களிலும் அதிகளவிற்கு அதிகமாக ஆக்கிரப்பில் அத்துமீறி பல வடிவங்களில் நீட்டி வழிப்பாதைகளை மறைத்து இருப்பதால் தினம்தோறும் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நடுரோட்டில் நின்று கடக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இந்த சாலைகள் இருபுறங்களிலும் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாக கட்டிடங்கள், சார்பதிவாளர் உள்பட அரசு அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், டாக்ஸி ஸ்டாண்டுகள், வேன் ஸ்டாண்ட், பலசரக்கு கடைகள், லாட்ஜ்கள், இரு புறங்களிலும் சாலையோர கடைகள் அதிக அளவில் ஆக்கிரமித்து இருப்பதால் அதுவும் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு சாத்தியமாகி சிக்கலை ஏற்படுத்துகிறது. அப்படி பல தரப்பட்ட கடைகள் இருப்பதால் இந்த ஆக்கிரமிப்புகள் நீடித்திருக்கும் நிலையில் தொடர்ந்து கடக்கின்ற வாகனங்கள் யாவுமே ஒன்றுக்கொன்று கடக்க முடியாமல் விலகிச் செல்ல முடியாமலும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஏற்படும் சூழலும் உள்ளது.

தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் அரசு பஸ்கள் உட்பட தனியார் பஸ்கள் யாவும் இந்த கூட்டம் நெரிசலில் வேகம் எடுக்கும் போது விபத்துகளை தடுக்க முடியாத தவிர்க்க முடியாத நிலையாக மாறுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் சேர்ர்து தினந்தோறும் ஏற்படும் ஸ்தம்பிக்கும் இந்த போக்குவரத்து நெருக்கடிகளை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodi ,Kamaraj Salai ,Periyandavar High Road ,Bodi Thevaram Salai ,Bodi… ,
× RELATED வெள்ளோடு அருகே சாலையோரம் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட அதிசய காளான்