×

ராசிபுரத்தில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயற்சி

நாமக்கல்: ராசிபுரத்தில் குடும்பத் தகராறில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை தீபா தனியாக வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றபோது ஆசிரியை மீது கார் மோதிவிட்டு சென்றுள்ளது. படுகாயம் அடைந்த ஆசிரியை தீபா சிகிச்சை பெறும் நிலையில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் விசாரணையில், தீபாவின் முன்னாள் கணவரே மாறுவேடத்தில் கார் ஏற்றிக் கொல்ல முயன்றது அம்பலமானது

Tags : Rasipuram ,Namakkal ,Deepa ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு