×

நீட் தேர்வு குளறுபடிகளால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பிரதமருக்கு கரப்பான் பூச்சி கட்சி கடிதம்

 

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் நாட்டின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் ஒரு தீவிரமடைந்து வரும் நெருக்கடி பற்றி, அதாவது நம் இளைய தலைமுறை மாணவர்களின் உயிர்கள் மற்றும் மனநலம் சார்ந்த விவகாரம் குறித்து உங்கள் உடனடி கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகுந்த மனவேதனையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

நீட் தேர்வு குளறுபடிகளால் கடந்த சில வாரங்களில் மட்டும் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் 5 பேர் 48 மணி நேரங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் பல மாணவர்கள் கல்வி கடன் வாங்கியும், தங்கள் பெற்றோர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஆனால் அவர்கள் நீட் தேர்வு குளறுபடி அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் குழந்தைகளின் கல்விக்காக செலவிட்ட நிலையில், அந்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்கள் முற்றிலும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மாணவர்களின் தற்கொலைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

Tags : Cockroach Janata Party ,Modi ,
× RELATED செல்போனில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ மெசேஜ்...