×

விபி ஜி ராம் ஜி திட்டம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள் நியமனம்

 

புதுடெல்லி: 100 நாள் வேலை திட்டத்திற்கு பதில் 125 நாள் வேலை வழங்கும் விபி ஜி ராம் ஜி திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பகுதி அதிகாரிகளை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கவுள்ளது. 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பங்காக ரூ. 95,692 கோடி இடைக்கால ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஏற்கனவே செய்துள்ளன. 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விபி ஜி ராம் ஜி திட்ட கட்டமைப்பின் கீழ் தங்கள் மாநிலத் திட்டங்களை அறிவித்துள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Tags : New Delhi ,Union… ,
× RELATED செல்போனில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ மெசேஜ்...