- நேரு
- காங்கிரஸ்
- பாஜக
- புது தில்லி
- ஜனாதிபதி
- ராகுல் காந்தி
- மக்களவை
- ராகுல்
- கங்கா நதி
- வாரணாசி
- ராகுல் காந்தியின்...
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக முன்னிறுத்தும் முயற்சிகளை பாஜ நிராகரித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியின் 56வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. வாரணாசியில் கங்கை ஆற்றில் ராகுலின் புகைப்படத்தின் மீது பால் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ராகுல்காந்தியின் படத்தை பரசுராமரை போல சித்தரித்து இருந்தனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில்,” ராஜீவ்காந்திக்கு பின் நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் பிரதமர் பதவியை வகிக்கவில்லை. நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராவது என்பது வெகுகாலத்திற்கு முந்தைய விஷயமாகிவிட்டது.
அந்தகுடும்பத்தை சேர்ந்த கடைசி பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி ஆவார். 1989ம் ஆண்டிலிருந்து 37ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் கூட ராகுல்காந்தி எதிர்காலத்தில் பிரதமராவதைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், அதற்கு அவர்கள் அற்பமான மற்றும் குறும்புத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்கு பதிலாக களத்தில் தீவிர பணிகளை செய்ய வேண்டியிருக்கும். ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. ராகுல்காந்தியின் பிறந்த நாளை என்ன தினமாக கொண்டாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களின் மற்றும் பார்வையாளர்களின் விவேகத்துக்கு விட்டுவிடுகிறேன்” என்றார்.
