×

கடவுளின் அவதாரம் எனக் கூறி ஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார்: கூட்டாளிகள் 7 பேரும் சிக்கினர்

 

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நவீன குருகுலம் என்ற ஆசிரமத்தை ராதேஷ்யம் மிஸ்ரா என்ற ராதாமோகன் மிஸ்ரா(59) என்ற சாமியார் நடத்தி வந்தார். தன்னை கடவுளின் அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் மிஸ்ராவுக்கு, அரியானாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பக்தர்களாக இருந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை தனது ஆசிரமத்தில் சேர்த்த மிஸ்ரா, தனது அத்துமீறலைத் தொடங்கியுள்ளார். 2010 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த மிஸ்ரா, அதனை வீடியோ எடுத்து மிரட்டினார். பின்னர் அவரது குடும்பத்தை புனேயில் குடியேற செய்த மிஸ்ரா அந்த பெண்ணை மிரட்டி பணம், நகை, சொத்துக்களை அபகரித்துள்ளார்.

பின்னர், ஆசிரமத்தில் வலுகட்டாயமாக தங்கவைக்கப்பட்ட பெண்ணை கட்டி வைத்து எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்த மிஸ்ரா, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் தனது சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்த அந்த பெண், புனே போலீசில் சென்று கடந்த 16ம் தேதியன்று மிஸ்ரா மீது புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவலில் அனைவரும் அடைக்கப்பட்டனர்.

மிஸ்ராவின் ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார், ரகசிய அறையில் இருந்து 12 லேப்டாப், 11 செல்போன், 19 ஹார்ட் டிரைவ்கள் மற்றும் ஏராளமான பென் டிரைவ்கள், கேசட்டுகளை மீட்டனர். மேலும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள், ஏராளமான மாத்திரைகள் மற்றும் மருந்துகளையும் போலீசார் மீட்டனர். இதேபாணியில் மேலும் பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தப்பிச் செல்ல சுரங்கப்பாதை
போலீசார் ஆய்வு நடத்தியதில் ஆசிரமத்தில் சுரங்கப்பாதை ஒன்றை அமைத்து அதன் வழியாகத் தப்பிச் செல்ல மிஸ்ரா திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

Tags : God ,Pune ,Radheshyam Mishra ,Radha Mohan Mishra ,Naveen Gurukulam ,Pune, Maharashtra ,Haryana ,Mishra ,
× RELATED செல்போனில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ மெசேஜ்...