×

கேரளத்தில் வாலிபருக்கு குரங்கு காய்ச்சல்

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த சில நாட்களாக நிபா, ஷிகெல்லா, டெங்கு உள்பட நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதற்கிடையே நிபா பாதித்த 43 வயதான வாலிபருக்கு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பல நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷிகெல்லா பாதித்து இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் (எம் பாக்ஸ்) பரவியது தெரியவந்து உள்ளது. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kozhikode Government Medical College Hospital ,
× RELATED செல்போனில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ மெசேஜ்...