×

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனையடுத்து நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Chennai Meteorological Centre ,Neelagiri ,Kovai ,Dindigul ,Theni ,Madurai ,Erode ,Sivaganga ,Trichy ,Ariyalur ,Perambalur ,Karur ,Tiruvannamalai ,Vellore ,
× RELATED முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30...