×

வில்லிவாக்கம் 200 அடி சாலையில் 20ம் தேதி முதல் தாதாங்குப்பம் சந்திப்பு – ராஜமங்கலம் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம்

 

சென்னை, ஜூன் 18: வில்லிவாக்கம் 200 அடி சாலையில் 20ம் தேதி முதல் தாதாங்குப்பம் சந்திப்பு – ராஜமங்கலம் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட 200 அடி சாலையில் தாதாங்குப்பம் சந்திப்பு முதல் ராஜமங்கலம் சந்திப்பு வரை உச்ச நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனைச் சீரமைத்து போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், தாதாங்குப்பம் முதல் ராஜமங்கலம் வரை மூன்று புதிய யூ- திருப்பங்கள் அமைக்கப்பட்டு 20ம் தேதி சனிக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, தாதாங்குப்பம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில், பழைய டிஆர்ஜே மருத்துவமனை எதிரில், ராஜமங்கலம் பகுதியில் உள்ள கருப்பட்டி காபி கடை எதிரில் ஆகிய இடங்களில் புதிய யூ – திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைப் பின்பற்றி தங்களது இலக்கை எளிதில் அடையலாம்.

அதன்படி, தாதாங்குப்பம் தெற்கு ரயில்வே சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, பழைய டி.ஆர்.ஜே. மருத்துவமனை அருகிலுள்ள யூ- திருப்பத்தை பயன்படுத்தி தங்களது இலக்கை அடையலாம். வாட்டர் கேனால் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, பழைய டி.ஆர்.ஜே. மருத்துவமனை அருகிலுள்ள யூ- திருப்பத்தை பயன்படுத்தி தங்களது இலக்கை அடையலாம். செந்தில் நகர் சந்திப்பு மற்றும் விவேகானந்தா நகர் மெயின் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, ராஜமங்கலம் கருப்பட்டி காஃபி அருகிலுள்ள யூ- திருப்பத்தை பயன்படுத்தி தங்களது இலக்கை அடையலாம். செந்தில் நகர் 3வது மெயின் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, பழைய டி.ஆர்.ஜே. மருத்துவமனை அருகிலுள்ள யூ- திருப்பத்தை பயன்படுத்தி தங்களது இலக்கை அடையலாம்.

தாதாங்குப்பம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் அமைக்கப்பட்டுள்ள யூ- திருப்பத்தை பயன்படுத்தி தங்களது இலக்கை அடையலாம். இந்த புதிய போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Villivakkam ,20th ,Dadanguppam junction ,Rajamangalam ,Chennai ,Rajamangalam junction ,Chennai Traffic Police ,Villivakkam… ,
× RELATED அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2.70 கோடி...