×

திருச்சி முடுக்குப்பட்டி பகுதியிலுள்ள மதுக்கடையை மூடக்கோரி மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

 

திருச்சி, ஜூன் 18: திருச்சி முடுக்குப்பட்டி அருகே திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கோயில்கள் அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார். இருப்பினும் அறிவிப்பு.., அறிவிப்பாகவே இதுவரை உள்ளது. சில 100 கடைகள் மூடப்பட்டதே தவிர ஏராளமான டாஸ்மாக் கடைகள் இன்றளவும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலேயே கோலாகலமாக இயங்கி வருகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags : Mudukkupatti ,Trichy ,Communist Party of India ,Marxist ,TASMAC ,Trichy-Pudukkottai road ,Mudukkupatti, Trichy ,Vijay ,Chief Minister of Tamil Nadu ,
× RELATED கல்லக்குடியில் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு