கீழக்கரை: ஏர்வாடி தர்கா அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தர்ஷிகா (12) ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மாலை பள்ளி விட்டதும் வீட்டு நோக்கி சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தர்ஷிகா மீது வேகமாக மோதியதில் தர்ஷிகா பலத்த காயமுற்று ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து உறவினர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஏர்வாடி அக்கரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி திருச்செந்தூர் வழியாக செல்லும் போக்குவரத்து இரண்டு மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இது குறித்து கீழக்கரை டிஎஸ்பி குணால் உத்தம் சரோதே நேரில் ஆய்வு செய்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு . விசாரணை நடத்தி வருகிறார்

