×

சரக்கு வருமானமே போயிடும்.. சஸ்பெண்டை ரத்து பண்ணுங்க.. டாஸ்மாக் அதிகாரியின் உத்தரவால் சர்ச்சை

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டு வந்தன. புகாரின் அடிப்படையில் கடையில் பணியாற்றிய 4 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட மேலாளர் சொக்கநாதன் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் உள்ள 192 டாஸ்மாக் கடைகளையும் திறக்க மாட்டோம், விற்பனையாளர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாவட்ட மேலாளர் சொக்கநாதனிடம் வலியுறுத்தினர்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.5 கோடி வரை டாஸ்மாக் வருவாய் ஈட்டி வருவதாகவும், தற்போது கடையை மூடினால் அரசுக்குதான் வருவாய் இழப்பு என்றும் கூறினர். இதனை தொடர்ந்து மாவட்ட மேலாளர் சொக்கநாதன் உடனடியாக டாஸ்மாக் பொது மேலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு ஊழியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு உடனே ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags : TASMAC ,Villupuram ,YouTube ,Facebook ,WhatsApp ,Pu.Mambakkam ,Ulundurpet ,Kallakurichi district ,
× RELATED மல்லிகை பார்சலில் வெடி வெடித்து கல்லூரி மாணவி விரல் துண்டானது