- Tirupathur
- முத்தையா
- கருப்பையா
- பிரம்மநாம்பட்டி
- திருப்பூர், சிவகங்கை மாவட்டம்
- Duweiler
- முண்டினம்
- சிங்கம்புனரி யூனியன் கிராமம்
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிராமணம்பட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் கருப்பையா (25). கட்டிடத் தொழிலாளி. இவர், சிங்கம்புணரி ஒன்றிய கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்கு டூவீலரில் சென்றார். வழியில் 10ம் வகுப்பு மாணவிகள் சைக்கிளில் சென்றுள்ளனர். டூவீலரை நிறுத்திய கருப்பையா, மாணவிகளைப் பார்த்து ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவிகள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் டூவீலர் நம்பரை அடையாளமாக வைத்து மாணவிகளின் பெற்றோர், திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணைக்கு பின்னர் நேற்று கருப்பையாவை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.
