- பிற்பகல்
- மோடி
- டிரம்ப்
- ஜி 7
- பிரான்ஸ், இத்தாலி
- ஈவியன்
- எங்களுக்கு
- வேந்தர்
- மக்ரோன்
- மெலோனி
- ஜி7 உச்சி மாநாடு
- பிரான்ஸ்
- ஸ்லோவாகியா
எவியன்: பிரான்சில் நடந்து வரும் ஜி 7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் உலகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஸ்லோவோக்கியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கு ஏவியனில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி போன்ற உலகத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதுதொடர்பான படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,’ எவியனில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் சக தலைவர்களுடன் கலந்து கொண்டேன். வளம், நிலைத்தன்மை மற்றும் மனித நலனை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி உரையாடினார். இருவரும் கைகுலுக்கி சந்தித்து கொண்டனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், தலைவர்களின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரான் போர் நிறுத்தம் மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் போர்கள்குறித்து பிரான்சில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். குழுப் புகைப்படம் எடுப்பதற்கு முன் மோடியும் மெலோனியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரதமர் மோடியைக் கட்டிப்பிடிக்க விரும்பிச்சென்றார். இந்த மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார். உச்சிமாநாட்டிற்காக வந்த தலைவர்களை பிரெஞ்சு அதிபர் மேக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரோன் ஆகியோர் வரவேற்றனர். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன், சீனா, இந்தியா, பிரேசில், கென்யா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
- கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் சுழற்சி முறைத் தலைமைப் பொறுப்பை தற்போது பிரான்ஸ் வகிக்கிறது.
- ஜி7 அமைப்பில் பங்கேற்காத நாடுகளின் தலைவர்கள் இந்திய பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் அல்-சிசி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென் கொரிய அதிபர் லீ ஜே-ம்யுங், கென்யா அதிபர் வில்லியம் சமோய் ரூட்டோ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
16 மாதங்களுக்கு பிறகு டிரம்ப்புடன் சந்திப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இருதரப்பு உறவுகளில் தொடர்ந்து நிலவும் விரிசலுக்கு மத்தியில், ஜி7 தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நேற்று சுமூகமாக உரையாடினர். 16 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் நேரில் சந்தித்து பேசிக்கொண்டனர். இருவரும் முதலில் கைகுலுக்கி, பின்னர் சிறிது நேரம் உரையாடினர். இன்று இருதரப்புக்கும் இடையிலான விரிவான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அவர்களது இந்தச் சுருக்கமான உரையாடலின் விவரங்கள் தெரியவரவில்லை என்றாலும், இந்தச் சந்திப்பு இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
நீல நிற கம்பள வரவேற்பு மோடிக்கு அவமதிப்பா?
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பிரதமர் நரேந்திர மோடியை நீல நிற கம்பளம் விரித்து வரவேற்றார். நீல நிறம், ராஜதந்திர உளவியலில், நீல நிறம் பெரும்பாலும் நம்பிக்கை, நம்பகத்தன்மை, உரையாடல் மற்றும் நிறுவன ரீதியான அங்கீகாரம் ஆகியவற்றின் நிறமாகக் கருதப்படுகிறது. சிவப்புக்கு பதில் நீல நிற கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டதால், பிரதமர் மோடிக்கு அவமதிப்பு நடந்ததா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
அரபு பத்திரிகையாளரை பாராட்டிய டிரம்ப்
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது அங்கு வந்திருந்த எமிரேட் பத்திரிகையாளர் ஒருவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், நகைச்சுவையாகப் பேசினார். அந்தப் பத்திரிகையாளரைச் சுட்டிக்காட்டி டிரம்ப்,’அவர் உங்கள் நாட்டைச் சேர்ந்தவரா? அவரிடம் மிகவும் நல்லதொரு பண்பு இருக்கிறது. என் ஆட்களோ மிகவும் கறாரானவர்கள்’ என்று கூறினார்.
