டெல்லி: நாடு முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் டெலிகிராம் பயன்படுத்த ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மே மாதம் நடத்த நீட் தேர்வில் வினாத்தாள் டெலிகிராம் மூலமே அனுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வினாத்தாள் கசிவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெலிகிராம் செயலி ஒருவாரம் காலம் வரை டெலிகிராம் செயல்படாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 22ம் தேதி வரை டெலிகிராம் பயன்படுத்த ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்ததை அடுத்து, ஒன்றியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசின் இந்த வழிகாட்டுதலை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69ஏ-ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ‘டெலிகிராம்’ அக்சஸ், நீட் மறுதேர்வு நடைபெற்று முடியும் வரை தடை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தச் செயலியில் ஜூன் 30 வரை மெசேஜ் எடிட்டிங் அம்சத்தை தற்காலிமாக தடை செய்யுமாறும் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
