×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

திருவள்ளூர், ஜூன் 15: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பீடு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத பயனாளிகளின் விவரங்கள் tiruvallur.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பயனாளிகள் தங்களது வைப்புநிதிப் பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களை நேரில் அணுகுமாறும் அல்லது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தினை அணுகுமாறும், மேலும் விவரங்களுக்கு 044 – 29896049 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.

 

Tags : Thiruvallur ,Thiruvallur District ,Collector ,Kavitha ,Tamil Nadu Electricity Finance Company ,
× RELATED திருத்தணி அருகே நெல் கொள்முதல்...