×

தி ஐ பவுண்டேஷன் சார்பில் உலக குளுக்கோமா வாரம்

கோவை,மார்ச்8:கோவை தி ஐ பவுண்டேஷன் சார்பில் உலக குளுக்கோமா வாரம் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து தி ஐ பவுண்டேஷன் மருத்துவ இயக்குனர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி கூறுகையில், “நாங்கள் இன்று(8ம் தேதி) முதல் 14ம் தேதி வரை உலக குளுக்கோமா வாரத்தையொட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, முழுமையான கண்பரிசோதனை செய்து, குளுக்கோமாவை ஆரம்ப நிலையை கண்டறிந்து, கண் பார்வை இழப்பை தடுக்க இலவச கண் அழுத்த நோய் பரிசோதனையை அனைத்து கிளைகளிலும் வழங்கவுள்ளோம். நோய் கண்டறியப்படும் நபர்களுக்கு பரிசோதனை, சிகிச்சை, அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செய்துதரப்படும்” என்றார். மேலும், குளுக்கோமா பற்றி தகவல்களை அறியவும், முன்பதிவு செய்யவும்- கோவை ஆர்.எஸ்.புரம் 0422-4242000, 94422-17796. கோவை சுங்கம் 0422-427881, 94425-17783 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : World ,i Foundation ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தின விழா