- யூனியன் பிஜேபி
- பெரம்பூர்
- பாஜக
- சென்னை பெரம்பூர் லோகோ பட்டறை அலுவல
- ரயில்வே தொழிற்சங்கம்
- SRES
- என். எஃப்
பெரம்பூர்: ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இதன்படி, சென்னை பெரம்பூர் லோகோ பணிமனை அலுவலகம் முன்பு நேற்று காலை எஸ்ஆர்இஎஸ், என்எப் ஐஆர் ஆகிய ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் மேனுவல் பாஸ் தொடர்ந்து வழங்கவேண்டும். ரயில்வே சம்பந்தப்பட்ட வேலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும்.
சீனியாரிட்டி முறையில் உள்ள குழப்பத்தை களைய நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். ரயில்வே தொழிற்சாலைகள் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். லோகோ பணிமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும்’ என்று வலியுறுத்தினர். அப்போது ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ், நிர்வாக பொதுச்செயலாளர் சந்திரசேகர், லோகோ பணிமனை கிளை செயலாளர் சதீஷ், கோட்ட உதவி செயலாளர் தணிகைவேல் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
