×

போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சி, ஜூன் 13: போதை மாத்திரை விற்ற 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 11ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காந்தி மார்க்கெட் தர்பார் மேடு அருகே போதை மாத்திரை விற்ற எடத்தெரு பிள்ளைமாநகரைச் சேர்ந்த சிவா(19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பாலக்கரை பெல்ஸ் கிரவுன்ட் ரேசன் கடை அருகே போதை மாத்திரை விற்ற சூர்யா(24) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Trichy ,Gandhi Market ,
× RELATED பணம் பறித்த ரவுடி கைது