×

பஸ்சில் மூதாட்டியிடம் 2 பவுன் செயின் திருட்டு

திருச்சி, ஜூன் 11: திருச்சியில் பஸ்சில் மூதாட்டியிடம் 2 பவுன் செயின் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (60). இவர் மே.17ம் தேதி கடைக்குச் செல்வதற்காக அஞ்சல் அலுவலகம் அருகே பஸ் ஏறி தெப்பக்குளம் சென்றார்.பின்னர் பஸ்சில் இறங்கி கடைக்கு சென்றபோது, தனது பணப்பையில் வைத்திருந்த 2 அரை பவுன் தங்க செயின் மற்றும் மோதிரம் மாயமானது. இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

 

Tags : Trichy ,Rani ,Ganeshapuram ,
× RELATED பணம் பறித்த ரவுடி கைது