×

அந்தியூர் ஜமாபந்தி முகாமில் நிபந்தனை பட்டாக்களுக்கு தீர்வு காணலாம்

ஈரோடு, ஜூன் 13: அந்தியூரில் நிபந்தனை பட்டாக்களின், நிபந்தனை நீக்க வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் தங்களது ஆவணங்களுடன் 17ம் தேதி முதல் நடக்கும் ஜமாபந்தி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா மற்றும் அந்தியூர் கிராமங்களில் கடந்த 1950-1960ம் ஆண்களில் பொது மற்றும் இதர பிரிவினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா பூமிகளுக்கான ‘அ’ பதிவேடு, கணினி சிட்டா ஆகியவற்றின் குறிப்பு கலத்தில் நிபந்தனைக்கு உட்பட்ட பட்டா என்பதை நீக்கம் செய்ய அரசாணை உரிய வழிகாட்டுதல்களுடன் வரப்பெற்றது.

இதன்பின்னர் விண்ணப்பிக்கப்பட்ட 293 இனங்களுக்கு விதிகளின்படி நிபந்தனை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தகுதியான பட்டாதாரர்கள் நில ஒப்படை வழங்கப்பட்டதற்கான அசல் நில ஒப்படை ஆணை, பதிவு பெற்ற ஆவணங்கள், பட்டா, சிட்டா, வில்லங்கச்சான்று மற்றும் இதர விபரங்களுடன் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் மற்றும் 23ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Anthiyur Jamapandi Camp ,Erode ,Anthiyur ,Jamapandi camp ,Anthiyur taluka ,
× RELATED திமுக தலைவரிடம் வாழ்த்து; மீனாட்சி...