×

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

பெரம்பூர்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்ய பிரியா (23). இவரது கணவர் மகேந்திரன். இருவரும் சென்னை வியாசர்பாடி பெரிய காமராஜர் நகர் பகுதி வசித்து வருகின்றனர். இவர்களுடன் திவ்ய பிரியாவின் தங்கை சுபஸ்ரீ (16) என்பவரும் தங்கி, பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சுபஸ்ரீ செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த திவ்ய பிரியா மற்றும் அவரது பெற்றோர் சுபஸ்ரீயை கண்டித்தனர்.

இந்நிலையில், சுபஸ்ரீ நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், திவ்ய பிரியா தனது கணவருடன் வங்கிக்கு சென்றார். மதியம் வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த திவ்ய பிரியா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுபஸ்ரீ தூக்கில் தொங்கியது தெரிந்தது.

திர்ச்சி அடைந்த திவ்ய பிரியா 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தபோது சுபஸ்ரீ இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், சுபஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Perambur ,Divya Priya ,Sivaganga district ,Mahendran ,Vyasarpadi Periya Kamaraj Nagar ,Chennai ,Subhasree ,
× RELATED பிரியாணியில் இறந்துபோன பூரான்...