குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றின் கரையோரம் செல்வதை தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
