×

தாம்பரம்- விழுப்புரம் மெமு ரயில் 3 நாட்கள் பகுதி நேர ரத்து!

சென்னை: சென்னை தாம்பரம்- விழுப்புரம் இடையேயான மெமு ரயில் நாளையம் , ஜூன் 17, 20 ஆம் தேதி ஆகிய மூன்று தேதிகளில் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், வரும் ஜூன் 13, 17, 20 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் விழுப்புரம் செல்வதுக்குப் பதிலாக முண்டியம்பாக்கம் நிலையம் வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் அந்த நாள்களில் விழுப்புரத்துக்குப் பதிலாக முண்டியம்பாக்கத்தில் பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tambaram ,Viluppuram ,Memu Train ,Chennai ,Chennai Thambaram-Vilupuram ,Trichy Railway ,
× RELATED ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு...