×

மானவ் சுதருக்கு ‘கவுண்டி’ கவுரவம்

மும்பை: ஆப்கானிஸ்தானுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் மானவ் சுதர் முதல் இன்னிங்சில் 33 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் மானவ் சுவருக்கு இங்கிலாந்தில் நடந்து வரும் வார்விக்‌ஷியர் கவுண்டி அணியில் விளையாடும் கவுரவம் கிடைத்துள்ளது. இவர் 2 போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இரவு கிளப்பில் ஜாலி, மோதல்; ஸ்டோக்ஸ், அட்கின்சன் நீக்கம்
லண்டன்: நியூசிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதையடுத்து, கடந்த 8ம் தேதி அதிகாலை ஒரு இரவு விடுதியில், ஜாலியாக இருந்தபோது ரக்பி வீரர் ஒருவருடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவர் மீதும் தற்போது தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இருவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக கேப்டனாக ஜோ ரூட் செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து வெற்றி
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, பெருவின் ஐனிஸ் காஸ்டிலோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றில் இந்திய வீரர் சனீத் தயானந்த் தனது 2-வது ஆட்டத்தில் 21-9, 21-16 என்ற நேர் செட்டில் மலேசியாவின் மிங் ஹாங் லிம்மை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு ஏற்றம் கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, ஆஸ்திரேலியாவின் லிம் ஜேடன்-விக்டோரியா ஜோனதி ஜோடி உடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags : Manav Sudar ,Mumbai ,India ,Afghanistan ,Warwickshire ,England ,
× RELATED இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் நீக்கம்