×

500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரைக்குடி, ஜூன் 11: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக காரைக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, இருசக்கர வாகன ஆய்வில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது பள்ளத்தூரை சேர்ந்த கணேசன் மகன் செல்வம் (40) என்பது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி மற்றும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரிசி என மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Karaikudi ,Karaikudi police ,Pallathur ,
× RELATED இடைத்தேர்தலில் புதிய வரலாறு படைப்போம்