×

குன்னூர் மவுண்ட்ரோடில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

குன்னூர், ஜூன் 11: நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அந்த பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஒரே வழித்தடத்தில் இயக்கப்படுவதால், இந்த பாதையில் வாகனங்களின் வரத்து அதிகரித்து நெரிசல் மேலும் தீவிரமடைகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்வதிலும், பேருந்து நிலையத்திற்கு விரைவில் செல்ல வேண்டும் என்ற அவசரத்திலும், கீழிருந்து மேல் வரும் இதர வாகனங்களுக்கு வழிவிடாமல் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், மவுண்ட்ரோடு பகுதி ஸ்தம்பித்து விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவல் துறையினரும் உடனடியாக தலையிட்டு, விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த பகுதியில் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசலைச் சீரமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor Mountain Road ,Coonoor ,Nilgiris district ,
× RELATED புதர்களால் வன விலங்குகளின் தொல்லை அதிகரிப்பு