×

கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடிய டியுசிஎஸ் தொமுச நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சரின் பழிவாங்கும் செயலுக்கு கண்டனம்

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் திருவல்லிக்கேணியில் உள்ள நகர கூட்டுறவு சங்கத்தில் (டியுசிஎஸ்) ஏழைகளுக்கு திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், கூட்டுறவு இணைப்பதிவாளர் தேவிபிரியா இதுகுறித்து விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘டியுசிஎஸ் லிமிடெட் திமுக தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் 18 பேர், கடந்த 3ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சங்க அலுவலக நுழைவாயிலில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

மேலும், எவ்வித அலுவலக முன் அனுமதி ஏதும் பெறாமலும், சங்க இணைப்பதிவாளர் அனுமதி பெறாமல் அவரின் அறையின் முன் உள்ள வரவறே்பு அறையில் உணவு விநியோகம் செய்யப்பட்டு சங்க விதிகளை மீறி உள்ளனர். எவ்வித எழுத்துபூர்வமான முன் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். எனவே அலவலக விதிமீறல் செயல்களுக்கான விளக்கத்தை 3 தினங்களுக்குள் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சுவாமிநாதன் கூறும்போது, ‘தொழிற்சங்கங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த கட்சி தலைவர்கள் பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். கடந்த 3ம் தேதி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து இணைப்பதிவாளர் தேவிபிரியாவிடம் தொலைபேசி வாயிலாக அனுமதி கேட்டுவிட்டு தான் அன்னதானம் வழங்கப்பட்டது. இதுதான் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையாக உள்ளது. ஆனால், தற்போது தொமுச நிர்வாகிகளை பழிவாங்க கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் உத்தரவின் பேரில் இணை பதிவாளர் நோட்டீஸ் வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது,’ என்றார்.

Tags : DUCS Domusa ,Kalaignar ,Chennai ,Chief Minister ,DMK ,Urban Cooperative Society ,DUCS ,Thiruvallikeni… ,
× RELATED சென்னையில் வரும் 13ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்