×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் செம்பியம் காவல் நிலைய போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரின் பையை சோதனை செய்தபோது 10 கிலோ கஞ்சா சிக்கியது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மியா (30) என்பதும், திரிபுராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ராகேஷ் மியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று புளியந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா சிக்கியது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திரிபூரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) என்பதும், அங்கு கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடன் பழகிய நபர்கள் ஒரு பார்சலை கொடுத்து சென்னைக்கு கொண்டு சென்று சேர்த்தால் ரூ.20 ஆயிரம் கொடுப்பார்கள் என்று கூறி அனுப்பியது தெரிந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : Perambur railway station ,Perambur ,Sembiyam police station police ,Tripura ,
× RELATED வாலிபரை அடித்து கொன்று கிணற்றில் சடலம் வீசிய கும்பல்