×

மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூன் 9: ஈரோடு சூரம்பட்டியில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மதன் தலைமை வகித்தார்.
இதில், மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிக்கக்கூடாது. மருந்து விலை கட்டுப்பாடு ஆணையத்தை செயல்படுத்தி, மருந்து விலையை நிர்ணயிக்க வேண்டும். சந்தையே விலையை தீர்மானிக்கும் என்ற கொள்கையை அரசு கைவிட வேண்டும். அத்யாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலை கட்டுப்பாட்டை பொருட்களின் மொத்த விலை நிர்ணய குறியீட்டில் இருந்து நீக்க வேண்டும். போலி, கலப்படம், தரமற்ற மருந்து உற்பத்திகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Erode ,Tamil Nadu Pharmaceutical and Sales Representatives Association ,Erode Surampatti ,Madan ,
× RELATED திமுக தலைவரிடம் வாழ்த்து; மீனாட்சி...