- சோலார் புதிய பேருந்து நிலையம்
- மொடக்குரிச்சி
- லக்கபுரம் பஞ்சாயத்து
- மொடக்குறிச்சி ஒன்றியம்
- லக்கபுரம் புதுவாலாக்கள்…
மொடக்குறிச்சி,ஜூன்9: சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்கி சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளது.
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சியில் சோலார் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு லக்காபுரம் புதுவலசிற்கு செல்லும் ரோட்டில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபம் ஒட்டி செல்கிறது.ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
