×

தவறான அறுவை சிகிச்சையால் சிறுவனின் மர்ம உறுப்பு நீக்கம்: 2 டாக்டர்கள் மீது வழக்கு

 

காரைக்குடி: காரைக்குடியில் சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததால் மர்ம உறுப்பு அகற்றும் நிலைக்கு சென்றதாக தாய் அளித்த புகாரில், 2 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள புதுச்சந்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் 10 வயது மகனுக்கு மர்மஉறுப்பில் அரிப்பு ஏற்பட்டதால் தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மர்மஉறுப்பின் மேல் பகுதியில் உள்ள தோலை அகற்ற வேண்டும் என கூறியதால் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

தொடர்ந்து அதே மருத்துவமனையில் வைத்து மற்றொரு டாக்டர் அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், சிறுவனுக்கு மர்ம உறுப்பு கருத்து, சிறுநீர் போகாமல் அவதிப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து சிறுவனின் தாயார் இதுபற்றி கேட்டபோது டாக்டர்கள் மிரட்டி நாங்கள் சொல்லும் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், சிறுவனின் தாய் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் மர்ம உறுப்பு கருத்து பாதிக்கப்பட்டதால் அதனை நீக்கி உள்ளனர்.

இதுதொடர்பாக சிறுவனின் தாய் தனது மகனுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் டாக்டர்கள் சோமசுந்தரம், காமாட்சிசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Karaikudi ,Puduchandhai ,Karaikudi, Sivaganga district… ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...