×

திருவேடகம், ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில்

மதுரையை கூன் பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்த நேரத்தில் சமண மதம் மன்னனின் ஆதரவுடன் ஆதிக்கம் செலுத்தி வந்தது. சைவ சிவ வழிபாடு ஏறக்குறைய வேரோடு இல்லாமல்தான் இருந்தது. இந்த சூழ்நிலையில் ஒரு குழந்தை சைவர் மதுரைக்கு வருகை புரிந்தார். இது சமணத் துறவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
அந்த சிவ சைவரை விரட்டும் நோக்கில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு தீ வைத்தனர் சிலர். அவர்களின் தீய எண்ணத்தை அறிந்த சைவர் ஞானசம்பந்தர். பத்து மந்திரங்களை பாடினார் அதனால் அங்கிருந்த தீ அணைந்து அங்கிருந்து தப்பினார். பின்பு, அந்த தருணத்தில் மன்னருக்குத் வெப்பு நோய் ஏற்பட்டது. சமணத் துறவிகள் தங்களுக்குத் தெரிந்த மந்திரங்களைக் கொண்டு குணப்படுத்த முயற்சித்தனர். ஆனால், எந்த தீர்வும் ஏற்படவில்லை. மன்னனை துயரத்திலிருந்து மீட்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைத்தான் மன்னன்.
கருணை கொண்ட ஞானசம்பந்தர் மன்னனின் அரண்மனைக்கு வந்து ‘மந்திரம் ஆவது நீறு…’ என்ற வரியுடன் தொடங்கும் பதிகத்தை பாடினார். இதன் பொருள் சிறந்த மந்திரம் என்பது சிவபெருமான் திருமேனியில் பூசப்பட்ட திருநீறு என்பது பொருள் உள்ளபடியான பதிகம். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சமையலறை திருநீற்றைக் கொண்டு மன்னனின் திருமேனியில் பூசினர். அம்மை நோய் எந்தவித தழும்புமின்றி மறைந்து போனது. இதனால், மன்னன் சிவ-சைவத்தின் மகிமையை சிந்திக்கலானான்.
இந்த நேரத்தில் சமணர்கள் ஒரு போட்டிக்கு சவால் விடுத்து, தோற்றால் மதுரையை விட்டு வெளியேறுவோம் என சபதம் செய்தனர். யாருடைய பதிகம் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி கரையை அடைகிறதோ, அவர்களே வெற்றியாளர்கள் என போட்டியை கூறினர். சமணர்கள் ‘அத்திநதி’ என்ற வரிகள் தொடங்கும் செய்யுள் எழுதி நீரோடையில் விடவே அது நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதுபோலவே, சம்பந்தர் எழுதிய ‘வன்னியும் மத்தமும்’ என்ற பாடலை எழுதி நதியில் விட அந்த ஓலை சிறிது தூரம் சென்று கரையை அடைந்தது. தமிழில் ‘ஏடு’ என்றால் பனை ஓலை என்று பொருள். அந்த ஓலை கரையை அடைந்த இடம் திருவேடகம். அங்குதான் ஏடகநாதர் அம்பாள் குழலியுடன் அங்கு வந்ததாக அறியப்பட்டது.
இங்குதான் ‘அனல் வாதம்’ ‘புனல் வாதம்’ நடந்தது. அனல் வாதத்தில் ஏடுகள் தீயிலிடப்பட்டது பின்பு, ஏடுகள் நீரிலிட்டு நடந்ததே புனல் வாதம் ஆகும். இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், குரு, சுக்ரன் கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளது.
*பௌர்ணமி நாளில் ஸ்தல விருட்சமான வில்வமரத்திற்கு பால் வார்த்தால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடன்கள் குறையும்.
*குழந்தைகள் பள்ளியில் சேர்க்கும் முன் இக்கோயிலுக்கு வந்து நெல்லில் எழுதி வழிபாடு செய்து பள்ளியில் சேர்த்தால் குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
*ஜாதகத்தில் குரு, சுக்ரன் சேர்க்கை உள்ளவர்கள் பூரம் நட்சத்திரத்தில் சுவாமிக்கு பாலால் செய்யப்பட்ட இனிப்பை நைவேத்தியம் செய்து கருப்பு நிற பசுவிற்கும் பக்தர்களுக்கும் பிரசாதத்தை கொடுத்தால் குரு – சுக்ர மூடம் குறையும்.
*ஜாதகத்தில் 8ம் பாவகத்தில் சூரியன் இருந்தால் இந்த திருத்தலத்திற்கு வந்து ஞாயிற்றுக் கிழமை அன்று செந்தாமரை மாலை கொடுத்து கருப்பு எள்ளுருண்டை, தயிர் சாதம் ஆகியவற்றை ைநவேத்தியம் செய்து. கருப்பு நிற பசுவிற்கு கொடுத்தால் முதலீடுகள் இரட்டிப்பாகி தொழில் முன்னேற்றம் உண்டாகும். இத்தலம் மதுரை-சோழவந்தானுக்கு அருகேயுள்ளது.

Tags : Thiruvedakam ,Edaganadeswarar Temple ,Madurai ,Koon Pandian ,Jainism ,Saivism ,Madurai… ,
× RELATED பொறுப்பு என்பது வெறும் கடமைகளைச் செய்வதா?