×

குடிநீர் வழங்காததை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி முற்றுகையிட்டு காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு ரயில்வே லைனில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் ஆறு வருடமாக இப்போதைக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்போது மக்கள் அருகில் உள்ள தெருக்களிலிருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்போதிலும் இவர்களுக்கு கிடைக்கும் சில மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கவில்லை என கூறப்படுகிறது இதனால் குடிநீருக்கு மிகவும் சிரமம் அடைந்துள்ளதாகவும் இது குறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காலி குடங்களுடன் தற்போது அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Muthupet Town Panchayat ,Thiruvarur district ,
× RELATED உணவுப் பொருட்களை செய்தித்தாளில் பார்சல் செய்ய வேண்டாம்: FSSAI எச்சரிக்கை