×

சொத்து பிரச்னையில் மோதல் 4 பேர் மீது போலீசார் வழக்கு

வடமதுரை, ஜூன் 8: வடமதுரையை அடுத்த செங்குறிச்சி அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(52). விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான சண்முகவேல் (35) என்பவருக்கும் இடையே, சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகவேல் குடும்பத்தினர் பழனிச்சாமியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பழனிச்சாமி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த அவரது புகாரின் பேரில் வடமதுரை போலீசார் சண்முகவேல், வள்ளியம்மாள்(55), கார்த்திகா(29) முத்தம்மாள்(55) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vadamadurai ,Palaniswami ,Mamarathupatti ,Sengurichi ,Shanmugavel ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...