×

பைக் திருடியவர் கைது

ஈரோடு,ஜூன்8: ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் பழனி (36). கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் ஐஸ் பார் கடை முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து ஈரோடு தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (39) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பைக் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது திருப்பூர் தெற்கு போலீசில் ஏற்கனவே 2 திருட்டு வழக்குகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

Tags : Erode ,Palani ,Jeeva Nagar, Rangampalayam, Erode ,Erode Railway Station ,
× RELATED திமுக தலைவரிடம் வாழ்த்து; மீனாட்சி...