சென்னை: பத்திரப் பதிவுத்துறையில் கடந்த மார்ச் மாதம் அறிமுகமான ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே முதல் விற்பனை மனை, அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் உள்ளிட்டற்றை ஆன்லைன் மூலமாக மக்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
