×

திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

கரூர், மார்ச். 6: கரூர் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரின்சி ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தலின் போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். இந்த கூட்டத்தில், திமுக பொருளாளர் கருப்பண்ணன், நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் உட்பட அனைத்து மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : DMK Women's Advisory Meeting ,
× RELATED திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்