×

திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, டிச.15: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா நவாப் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று, ஆலோசனை வழங்கி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட மகளிரணி சார்பில் புதியதாக உறுப்பினர்களாக சேர்ந்த 12,500 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதில், திமுக மகளிரணி பிரசார குழுவைச் சேர்ந்த சேலம் சுஜாதா, மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆதி மகேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Tags : DMK Women's Advisory Meeting ,
× RELATED திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்