×

இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்: எடப்பாடியை இனி விமர்சித்தால்… ஆதவ் அர்ஜூனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க எந்தவித தகுதியும் இல்லாத சந்தர்ப்பவாதி ஆதவ்அர்ஜூனா, இனியும் அவர் விமர்சித்தால் நேரடியாக அவர் முன்பே போராட்டம் செய்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்தவர்கள், ததவெகவில் இணைந்த நிகழ்ச்சி அமைச்சர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. அப்படி இணைகின்ற போது, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பல்வேறு தவறான கருத்துக்களை தான்தோன்றித்தனமாக பதிய வைத்திருக்கிறார். குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகியவர்களுக்கு தவெக தாய்கட்சி என்றதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அவர் நெல் மேல் குருவி ேபால, எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அங்ெகல்லாம் ஓடி ஓடிச் சென்றார். இறுதியாக தவெகவுக்கு போனார். அமைச்சர் ஆனார். அதோடு நின்றுவிட வேண்டும். மற்ற கட்சியின் வரலாறையோ, அது வளர்ந்த விதத்தையோ, லட்சக்கணக்கான தொண்டர்கள் செய்த தியாகத்தையோ, அவர் மதிப்பிடாமல் தான்தோன்றித்தனமாக கருத்து சொல்லக்கூடாது. ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வாக்களித்து தான், தவெக வெற்றி பெற்றது என்று கூச்சப்படாமல், வெட்கப்படாமல் கூறியுள்ளார். அதிமுக தொண்டர்களை, இந்த சந்தர்ப்பவாதி கொச்சைப்படுத்துகிறார். இதோடு அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நேரடியான போராட்டத்திற்கு அவர் முன்ேப சென்று நிற்பேன் என்பதை இறுதி எச்சரிக்கையாக விடுக்கிறேன்.

அதேபோல எங்கள் பொதுச்செயலாளரை பேப்பரில் தான் பொதுச்செயலாளர் என்கிறார். ஆதவ் அர்ஜூனாவுக்கு நாவடக்கம் வேண்டும். உன்னைபோல் பல கட்சிகளுக்கு சென்று பதவி சுகம் அனுபவித்தவர் அல்ல எங்கள் பொதுச்செயலாளர். கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருக்கிறார். அவரைப்பற்றி கருத்து சொல்வதற்கு உனக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும், எந்தவித அருகதையும் இல்லை. மற்ற கட்சி தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த கட்சி மாறிகளின் வரலாறை பார்த்தால் அவர்கள், பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்தவர்கள். வாழ்வளித்து, அங்கீகாரம் கொடுத்து சமூகத்தில் அடையாளம் காட்டிய இயக்கத்தையே காட்டிக் கொடுக்கும் அவர்களை வரவேற்கிறார் இந்த சந்தர்ப்பவாதி. அதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தமிழகம் முன்னணியில் இருக்க 2 திராவிட கட்சிகளே காரணம்
தமிழகம் தற்போது இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருப்பதற்கு 2 திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம். இந்த வரலாறு எல்லாம் ஆதவ் அர்ஜூனாவுக்கு தெரியாது. எங்கள் கட்சியினர் தவெகவை ஆதரிக்க வேண்டும் என்றனர். அப்படி ஆதரிப்பதாக சொன்னவர்களுக்கு நீங்கள் கொடுத்த நம்பிக்கை என்ன? உங்களுக்கு ஆதரவு தேவை என்றால் எடப்பாடியை அல்லவா பார்த்திருக்க வேண்டும். எங்கள் கட்சி நண்பர்களை அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, நம்பிக்ைக துரோகம் செய்தவர் ஆதவ் அர்ஜூனா. நீங்கள் எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதிகள். உங்களை நிலைநிறுத்த மற்ற கட்சிகளை பலிகடா ஆக்குகிறீர்கள். தயவு செய்து சித்து விளையாட்டுகள், உங்களது லாட்டரி டிக்கெட் விளையாட்டுகள் எல்லாம் எங்களிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். போலி ெதாண்டர்களை அழைத்துக் கொண்ட தவெகவிற்கு நன்றி என்று கே.பி.முனுசாமி கூறினார்.

Tags : Weidapadi ,Aadav Arjuna ,K. B. Munusamy ,KRISHNAGIRI ,AADAVARJUNA ,ADAMUGA ,GENERAL SECRETARY ,EDAPPADI PALANISAMI ,SAID FORMER ,MINISTER ,Kaverippatnam, Krishnagiri District ,
× RELATED முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய...