×

பழநியில் மரக்கன்று நடும் விழா

பழநி, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பழநி நகராட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பெரியப்பா நகரில் உள்ள திடக்கழிவு மையம், ரயில்வே பீடர் சாலையின் நடுவில் உள்ள டிவைடர் பகுதிகள் மற்றும் நகராட்சி பள்ளிகளின் வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி ஆணையர் டிட்டோ தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதர ஆய்வாளர் சுரேஷ்குமார், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Palani ,Palani Municipality ,World Environment Day ,Periappa Nagar ,Railway Peeder Road ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து