×

மது அருந்தியை தட்டி கேட்டதால் ஆத்திரம் தலைமை காவலர் மீது தாக்குதல்

 

குன்றத்தூர், ஜூன் 19: மதுரவாயல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மோகன்ராஜ் (39). இவர் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் தனலட்சுமி நகர், ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மோகன்ராஜ் அறிவுறுத்திய நிலையில் மது போதையில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மோகன்ராஜுக்கும், போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போதையில் இருந்தவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்ற நிலையில் மதுரவாயல், தனலட்சுமி நகரை சேர்ந்த சரவணன் (35), என்பவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீசார் தன்னை தாக்கியதால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் மதுரவாயல் காவல் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் மோகன்ராஜ் தன்னை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறி புகார் அளித்தார்.

பணி செய்ய விடாமல் தடுத்ததாக மது போதையில் இருந்த நபர்கள் மீது போலீஸ்காரர் மோகன்ராஜூம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதன் உண்மை தன்மை குறித்து தலைமைக் காவலர் மோகன்ராஜ் மற்றும் புகார் அளித்த சரவணன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kundrathur ,Mohanraj ,Maduravoyal police station ,Dhanalakshmi Nagar, Maduravoyal ,
× RELATED மது பிரியர்களிடம் வசூலிப்பதற்காக...